கடலூர்: ஆசிட்டை குடித்த மூதாட்டி உயிரிழப்பு

5பார்த்தது
கடலூர்: ஆசிட்டை குடித்த மூதாட்டி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே குட்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ஜெயா (65) என்பவர், வீட்டில் பாட்டிலில் இருந்த கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து தவறுதலாக குடித்தார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி