கடலூர்: காவல் ஆய்வாளரை பாராட்டி நன்றி தெரிவிப்பு

54பார்த்தது
கடலூர்: காவல் ஆய்வாளரை பாராட்டி நன்றி தெரிவிப்பு
கோவை மாநகரில் 74 வயது முதியவர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு 15 ஆம் தேதி போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டார். முதியவரின் லொகேஷனை காவல்துறையினர் மூலம் லோகேஷன் செக் செய்தபோது திருச்சி ஸ்ரீரங்கம் காட்டியது. முதியவர் கோவிலுக்கு சென்று இருக்கலாம் என குடும்பத்தாரை சமாதானம் செய்த கொஞ்ச நேரத்திலேயே முதியவர் தொடர்பு கொண்டு குடும்பத்தாரிடம் பேசியபோது தற்போது கடலூர் கடற்கரையில் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் சொல்லிவிட்டு மீண்டும் போனை ஆப் செய்து விட்டார். மீண்டும் லொகேஷன் பார்த்தபோது கடலூர் கடல் பகுதியை காட்டியது. உடனே திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியதும் உடனடியாக தேடியபோது முதியவர் லாட்ஜில் இருப்பதை கண்டுபிடித்து முதியவரிடம் ஆறுதலாக பேசி சமாதானப்படுத்தி குடும்பத்தாரிடம் பத்திரமாக அனுப்பி வைத்தார். முதியவரை மீட்டு கொடுத்த காவல் ஆய்வாளரை மகிழ்ச்சியோடு கண்ணீர் மல்க "இன்ஸ்பெக்டர் சந்திரன் சார் தான் எங்களுக்கு சாமி" என கூறி காவல் ஆய்வாளரை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி