கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.