கடலூர்: இரிடியம் முதலீட்டில் ரூ.80 லட்சம் மோசடி: ஒருவர் கைது

752பார்த்தது
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அதர்நத்தத்தைச் சேர்ந்த பரமசெல்வம், இரிடியம் தனிமத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் 1 லட்சம் ரூபாயை 1 கோடியாக மாற்றுவதாக ஆசை வார்த்தை கூறி, ஆவினங்குடி ராமர், கருவேப்பிலங்குறிச்சி கல்யாணசுந்தரம், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரிடம் ரூ. 80 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த பரமசெல்வத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி