தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி முன்னிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா இன்று அந்தக் குழந்தைக்கு தங்க மோதிரத்தை அணிவித்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.