தேசிய அளவிலான மனித உரிமைகளும், பெண்களுக்கு நேரிடும் அத்து மீறல்கள் குறித்து மாபெரும் கருத்தரங்கம் கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை தங்கள் வாழ்நாள் பயணங்களில் அனுபவிக்கும் பல்வேறு பட்ட வேதனைகள், சோதனைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மன அழுத்தம் குறித்தும் சட்டத்தில் பெண்களுக்கு வழங்க பட கூடிய ஆளுமையும், வேலைவாய்ப்பு, படிப்பு, மற்றும் அரசியல், பொருளதரா அமைப்பபில் பங்களிப்பு, ஆட்சி உரிமையில் பங்களிப்பு, உள்ளாட்சி அமைப்பு, நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றம், ஒதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட நீதியரசர் ஜே. அன்வர் சதாத் மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பி. நல்லதுரை, காவல்துறை உதவி ஆய்வாளர் ஹென்ரி, அரசுதரப்பு வழக்கறிஞர் க. ஜெயபாரதி, வழக்கறிஞர் திருமார்பன், புதுச்சேரி வழக்கறிஞர் ஃபைத் கிருபா மற்றும் முனைவர் அ. ராஜேந்திரன்
( இணை பேராசிரியர்) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறுபட்ட கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.