கடலூர் கே.என். பேட்டையைச் சேர்ந்த தொழிலாளி சங்கர், நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்தபோது, அவரது மனைவி தேவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கர், அளவுக்கு அதிகமாக பி.பி. மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.