கடலூர்: மதுவிலக்கு சோதனை சாவடிகளில் ஆய்வு

246பார்த்தது
கடலூர்: மதுவிலக்கு சோதனை சாவடிகளில் ஆய்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில், உண்ணாமலைசாவடி, அழகியநத்தம், மருதாடு, வான்பாக்கம், மேல்பட்டாபாக்கம், கண்டரக்கோட்டை ஆகிய சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்தார். சோதனைச் சாவடி காவலர்களுக்கு மது கடத்தல் தடுப்பு குறித்து அவர் அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி