கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மகளிர் தையல் இலவச தொழிற்பயிற்சிக்கு நேர்காணல் நாளை (மே 27) காலை 9.30 மணியளவில் கடலூரில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி 31 நாட்கள் நடைபெறும். பயிற்சி முடிந்ததும் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04142-796183, 8124640451 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.