கடலூர்: கழுத்தில் அணிந்திருந்த செயின் பறிப்பு; அதிர்ச்சி

76பார்த்தது
கடலூர்: கழுத்தில் அணிந்திருந்த செயின் பறிப்பு;  அதிர்ச்சி
கடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த பாலு இவருடைய மனைவி ராதா தனது சொந்த ஊரான பூவாலை கிராமத்திற்கு செல்வதற்காக கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்த கிராம பேருந்தில் ராதா ஏறினார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ராதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றதாக தெரிகிறது. பறிபோன நகையின் மதிப்பு ரூபாய் 3.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது பற்றி அவரது மகன் சுதந்திரதாசன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி