கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.