கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் "ஒன்றிணைவோம்" விழிப்புணர்வு கருத்தரங்கம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் நம்மை சுற்றி வாழுகின்ற எந்த ஒரு நபருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையே சமூக நீதி, சமூக நீதியை பின்பற்ற முதலில் நமது வீட்டில் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்.
குறிப்பாக நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கு மரியாதை கொடுக்கும்போது நமக்கு மரியாதை தானாக வரும். பள்ளியில் படிப்பது மட்டுமே பாடம் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இருளை அகற்றும் கல்வியை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குசேலர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன்குமார், இராமதாஸ், சௌமியா கலந்து கொண்டனர்.