கடலூர் அண்ணாபாலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோவிலில் நேற்று காலை 11.30 மணியளவில் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜை நடைபெற்ற அதே நேரத்தில் கடலூரில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கி கோவில் கோபுர கலசம் சேதமடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அருகில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கலசம் விழுந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.