கடலூர்: சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி விழா

0பார்த்தது
கடலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி