கடலூர் முதுநகர் அடுத்த செல்லங்குப்பம் சுனாமி நகர் குட்டைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது. கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், இறந்தவர் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. போலீஸ் விசாரணையில், இறந்தவர் கடந்த மாதம் புது சுனாமி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 65) என்பது தெரியவந்தது.