கடலூர் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (தனியார் பேருந்து ஓட்டுநர்) ராமாபுரம் புதிய பைபாஸ் வழியாக நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.