கடலூர் மாவட்டம் அன்னவல்லி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம், திருமணம் ஆகாதவர். நேற்று இயற்கை உபாதைக்காக அன்னவல்லி ஏரிக்குச் சென்றபோது, தவறி ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.