மாசி மக திருவிழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையம் கடற்கரை சாலையில் மார்ச் 2 ஆம் தேதி அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் இந்த அன்னதானத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.