விழுப்புரம் மாவட்டம் தொல்லாமூரை சேர்ந்த ரவி மகன் வெங்கடேசன் நேற்று இவரும் இவரது அண்ணன் பிரகாஷ் என்பவரும் 2 டிப்பர் லாரிகளில் எம். சாண்ட் ஏற்றிக் கொண்டு கடலூர் கே. என். பேட்டைக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் லாரிகளை அங்குள்ள பள்ளி எதிரே நிறுத்தி விட்டு அதிலேயே படுத்து தூங்கினர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் லாரிகளின் முன் பக்கம் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூபாய் 5 ஆயிரத்தையும் திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.