கடலூரில் வனத்துறையினர் ஜனவரி மாதம் முதல் தேவனாம்பட்டினம், சொத்திக்குப்பம் உள்ளிட்ட 13 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை சேகரித்து வந்தனர். சேகரிக்கப்பட்ட முட்டைகளை அடைகாக்க கடலூர் கடற்கரையில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து, மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று, இவற்றில் 300-க்கும் மேற்பட்ட முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்துள்ளன. வனத்துறையினர் இந்த ஆமை குஞ்சுகளை கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் விட்டனர். கடலை நோக்கி சென்ற ஆமை குஞ்சுகள்.