கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு அருள் பாண்டியன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பாலாஜி, கவியரசன், ஆனந்த், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.