கடலூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மனமகிழ் மன்றத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் திறந்து வைத்தார். காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு மற்றும் TNPSC தேர்வு சம்பந்தமான புத்தகங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. கோடீஸ்வரன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டைராஜ், ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.