கடலூர் வரக்கால்பட்டு ரயில் நிலையம் அருகே, ராமேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். கடலூர் துறைமுகம் ரயில்வே காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடலூர் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.