கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இன்று (நவ. 7) இரவு 10 மணி முதல் நாளை (நவ. 8) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் காவல்துறையை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.