கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் கடலூர் மாவட்டம் SRJ திருமண மண்டபத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன்குமார், ராஜா, பாலகிருஷ்ணன், லாமேக், விஜிகுமார் ஆகியோர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர்.