கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ். தலைமையில் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் அளித்த புகார் மனுக்கள் மீது அவர் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டுமென அவர் உத்தரவு பிறப்பித்தார்.