கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில், காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.