கடலூர்: சூதாட்டம்.. 10 பேருக்கு போலீஸ் வலை

480பார்த்தது
கடலூர்: சூதாட்டம்.. 10 பேருக்கு போலீஸ் வலை
கடலூர் கே.என்.பேட்டை அருகே சவுக்கு தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். திருவந்திபுரம் சாலக்கரை பகுதியை சேர்ந்த பிரகாஷ், மொட்டை பிரகாஷ், சங்கரலிங்கம் உள்ளிட்ட 10 பேர் சூதாடியதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் விட்டுச்சென்ற 6 மோட்டார் சைக்கிள்கள், 1 செல்போன் மற்றும் ரூ.1000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 10 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி