கடலூர்: மருத்துவத்திற்கு நிதி வழங்கிய காவலர்கள்

1பார்த்தது
கடலூர்: மருத்துவத்திற்கு நிதி வழங்கிய காவலர்கள்
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் P. விபூஷ்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆதரவாக, 2003 ஆம் ஆண்டு அவருடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து ₹1,66,750 நிதியைத் திரட்டினர். இந்த நிதியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ், தலைமை காவலர் விபூஷ்ணன் குடும்பத்தினரிடம் சிகிச்சைக்காக வழங்கினார். இந்த நிகழ்வின் போது 2003 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினரும் உடனிருந்தனர். இது சக காவலர்களிடையே நிலவும் ஒற்றுமையையும், உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி