கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ், 31.05.2026 அன்று பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் துரைக்கண்ணு, ரவிச்சந்திரன், பாஸ்கர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமரேசன், தாமோதரன், வெங்கடேசன், பாபு, நடராஜன், ஆறுமுகம், ஆய்வக வல்லுநர் ஜெயந்தி, உதவியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கௌரவித்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள் உடல் நலனை பேணிக்காத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துரை வழங்கினார்.