கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கப்பட உள்ளனர்.