தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவும், மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.