கடலூர் மாவட்டம் மோப்பநாய் படை பிரிவில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்க புதிதாக மோப்பநாய் ROCKY, கோயம்புத்தூர் மோப்பநாய் பயிற்சி மையத்தில் ஆறு மாத கால சிறப்பு பயிற்சி முடித்து கடலூர் மோப்பநாய் பிரிவில் புதிதாக பணியாற்றயுள்ளது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ், Rocky யை நேரில் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. கோடீஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் A. மனிஷா மற்றும் மோப்பநாய் பிரிவு காவல்துறையினர் உடன் இருந்தனர்.