கடலூர்: விபத்து நடந்த இடத்தில் எஸ்பி விசாரணை

8பார்த்தது
கடலூர்: விபத்து நடந்த இடத்தில் எஸ்பி விசாரணை
கடலூர் பைபாஸ் சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த விபத்து நடந்த இடத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அவர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து, இது குறித்து காவல் துறையினரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் ஏராளமானோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.