கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 21) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.