கடலூர்: சடலத்தை சேற்றில் தூக்கிச் செல்லும் அவலம்

4பார்த்தது
கடலூர் மாவட்டம் வாண்டியாங்குப்பம் பகுதியில் மயானத்திற்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் சேற்றில் சடலங்களைத் தூக்கிச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மயானத்திற்குச் செல்ல தகுந்த சாலை வசதி இல்லாததால், உடல்களை எடுத்துச் செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, மயானத்திற்குச் செல்ல பாதை அமைத்து, மயான கொட்டகை கட்டியெழுப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you