கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று (ஜனவரி 11) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 240, நாட்டுக்கோழி கிலோ ரூ. 400, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனை செய்யப்பட்டது. மீன் வகைகளில், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 1000, வௌவால் மீன் கிலோ ரூ. 500, சங்கரா மீன் கிலோ ரூ. 400, காரை மீன் கிலோ ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டது.