கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஸ்டம்ஸ் ரோடு அருகே தென்பெண்ணையாற்றில் மர்ம நபர்கள் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வருவதைக் கண்டதும் திருடர்கள் டிராக்டரை விட்டு தப்பியோடினர். போலீசார் ஆற்று மணலுடன் நின்றிருந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.