கடலூர்: பயிற்சி வகுப்பு நிறைவு

77பார்த்தது
கடலூர்: பயிற்சி வகுப்பு நிறைவு
கடலூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் 2024-தேர்வு செய்யப்பட்ட 20 ஊர்க்காவல் படையினர் 45 நாட்கள் அடிப்படை கவாத்து பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு இன்றுடன் நிறைவு பெற்றது. பயிற்சி முடித்த ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஏற்று கொண்டார். பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்து பேசுகையில் காவல் பணி சவால்கள் நிறைந்த பணி, ஊர்காவல் பணியில் இடர்பாடுகள் இருந்தாலும் கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பணியில் சளைத்தவர்கள் யாரும் இல்லை. கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் இலக்குகளை அடைய செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு கடமை ஆற்றுகையில் பாரபட்சம் இல்லாமல் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி