குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் ஊராட்சி குறிஞ்சி நகரில் துப்புரவு பணியின் போது எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் துப்புரவு பணியாளர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி, உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். உடன் கடலூர் மாநகராட்சி மேயர் தசுந்தரி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.