கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், மக்கள் நலப் பணியாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.