கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த கார் டிரைவர் பிரேம் ஆனந்த், தனது மனைவி தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம் ஆனந்தை கைது செய்தனர். கடலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், நீதிபதி குலசேகரன், பிரேம் ஆனந்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார்.