கடலூர் மாவட்டம் தியாகவல்லியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பன்னீர்செல்வத்தின் மகள் ராஜேஸ்வரி (25), புதுச்சேரியில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரை ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.