கடலூர் அருகே கிழக்கு ராமபுரம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சத்யநாதன் (44) சிதம்பரம்-விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் நத்தப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே மயங்கி கிடந்தார். அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடலூர் புது நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.