கடலூர்: பொதுமக்களை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது

1பார்த்தது
கடலூர்: பொதுமக்களை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது
கடலூர் அண்ணா பாலம் சிக்னல் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு, ஏட்டு ராஜீவ் காந்தி ஆகியோர், புலியூர் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (30) பொதுமக்களை ஆபாசமாக பேசியதையும், போக்குவரத்து சிக்னல் போட்டு தொல்லை செய்வதாக திட்டியதையும் கண்டனர். இது குறித்து ஏட்டு ராஜீவ்காந்தி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி