கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கரிக்கன் நகரை சேர்ந்த சரண் பாண்டியன் இவருக்கும் சோனி என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சரண் பாண்டியன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.