கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பைரோஸ் (32) என்பவர் இறந்து கிடந்தார். இது குறித்து மஞ்சக்குப்பம் வி.ஏ.ஓ. சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடலூருக்கு எதற்காக வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.