கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அருகே மாசி மகம் நடைபெறும் இடத்தில் உள்ள பெரியார் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் மூன்று இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஹரிகரன் என்ற மாணவர் மீது எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடியின் தீவிர தாக்குதலால் மற்ற இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.