கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குள்ளஞ்சாவடி வடக்கு வசனாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ஞானேஸ்வரன் (66), தனது மனைவி தனலட்சுமி (50) உடன் சொசைட்டியில் பால் ஊற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.