கடலூர் திமுக நகர கழக அலுவலகத்தில் நகர செயலாளர் ராஜா தலைமையில், மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாவட்ட கல்வி குழு தலைவர் இன்ஜினியர் சிவகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சிறப்பு வாக்காளர் திருத்த படிவங்களை விரைவாக விண்ணப்பித்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.